வரும் 16ஆம் தேதி அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு

1பார்த்தது
வரும் 16ஆம் தேதி அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு
நாகப்பட்டினம் மாவட்டத்தில், எதிர்வரும் 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான கணினி வழித்தேர்வு மூன்று மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வில் மொத்தம் 942 பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வு மையங்களில் பாதுகாப்பு, தொடர் மின் விநியோகம், பேருந்து மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் கைப்பேசி மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை கொண்டு வரக்கூடாது. முற்பகல் தேர்வுக்கு காலை 9 மணிக்கும், பிற்பகல் தேர்வுக்கு பிற்பகல் 2 மணிக்கும் முன் தேர்வறைக்குள் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி