திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் ஆலய சித்திரை திருவிழா

59பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலில் அமைந்துள்ள பழமை வாய்ந்த திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமான வண்டுவார் குழலி வண்டுவார் குழலி தாமோதரநாயகி சமேத இரத்தினகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு தேரோட்டம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடைபெற்றது. 

தேரில் பிள்ளையார், மாரியம்மன், சண்டிகேஸ்வரர், இரத்தினகிரீஸ்வரர் உள்ளிட்ட பஞ்சபூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ஆலயத்தை சுற்றியுள்ள 4 முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி