நாகப்பட்டினம் அருகே புத்தூர் ரவுண்டானா பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நாகை நகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலை புதிய பாலம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்ற மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நாகை வெளிப்பாளையம் நாடார் தெருவைச் சேர்ந்த ஆதித்யா (21), வெளிப்பாளையம் வஉசி. தெருவைச் சேர்ந்த ராஜகுமாரன் (23), தாமரைக்குளம் தென்கரையைச் சேர்ந்த ரோகித் (20) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர்.