நாகப்பட்டினம் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் மீன் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. பிராய்லர் கோழி ஒரு கிலோ ரூ.240, நாட்டுக்கோழி ரூ.500, ஆட்டுகறி ரூ.1000 என விற்பனையாகிறது. மீன் பிடித்தல் காலம் என்பதால் பெரிய அளவிலான மீன்கள், இறால், நண்டு குறைவாகவே கிடைக்கின்றன. பைபர் படகுகள் மூலம் பிடிக்கப்படும் காலா மீன் கிலோ ரூ.900 மற்றும் வாவல் மீன் ரூ.1350-க்கு விற்பனையாகிறது.