வரும் 17ஆம் தேதி ரயில் மறியல் மற்றும் கடையடைப்பு போராட்டம்

6பார்த்தது
நாகப்பட்டினத்தில் இந்திய வர்த்தக தொழிற்குழும சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், நாகப்பட்டினம், நாகூர், வேளாங்கண்ணி, காரைக்கால் பயணிகள் ரயில் மூலம் 2022 முதல் 2025 வரை தென்னக ரயில்வேக்கு ரூ. 25 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தும், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களை ரயில்வே நிர்வாகம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை கண்டித்து வரும் 17ம் தேதி நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கடைகள் அடைப்பு, நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து சேவை சங்கங்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள், அரசியல் கட்சியினர் பங்கேற்பர்.

தொடர்புடைய செய்தி