நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே வாழக்கரையைச் சேர்ந்த விஏஓ ராஜாராமன் (38), லஞ்சம் பெற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வீடு திரும்பாத நிலையில், கற்களால் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். வெளிப்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், நாகப்பட்டினம் செல்லூர் அருகே திருநங்கைகள் நிவேதா (20), ஸ்ரீகவி (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மதுபோதையில் வயலில் படுத்திருந்த ராஜாராமன் மீது கருங்கல்லைப் போட்டு கொலை செய்து, அவரிடமிருந்த பணம், செல்போன், மோதிரம் ஆகியவற்றை பறித்துச் சென்றதாக அவர்கள் விசாரணையில் ஒப்புக்கொண்டனர்.