வேதாரண்யம் தொகுதி வெற்றி பெற வேண்டும்.. ஸ்டாலின் உத்தரவு

711பார்த்தது
வேதாரண்யம் தொகுதி வெற்றி பெற வேண்டும்.. ஸ்டாலின் உத்தரவு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி வருகிறார். இன்று (நவம்பர் 12) வேதாரண்யம் தொகுதி நிர்வாகிகளை சந்தித்த முதலமைச்சர், இந்த முறை வேதாரண்யம் தொகுதியை வென்றெடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். கடந்த முறை 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தோல்வி அடைந்தார். ‘உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் இதுவரை 37 நாட்களில் 79 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி