நாகூர் அடுத்த வாஞ்சூர் சோதனை சாவடி பகுதியில் சிபிசிஎல் நிறுவனம் இழப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் 4 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாகப்பட்டினம் - காரைக்கால் பைபாஸ் சாலை மற்றும் நாகூர் திருமருகல் சாலை என நான்கு வழி சாலைகளும் ஸ்தம்பித்தன. பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில்
போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.