நாகையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ராஜ்மோகன், மீனவர்கள் விவகாரத்தில் தமிழக அரசு கடிதங்கள் மட்டுமே எழுதுவதாகவும், ஒன்றிய அரசு அவற்றை வாங்கி வைத்துக்கொண்டு கண்துடைப்பு வேலைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார். இந்த விஷயத்தில் தமிழக அரசும் ஒன்றிய அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விஜய் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடர்ந்து நடைபெறும் என்றும், விரைவில் விஜய் ஊடகங்களை சந்திப்பார் என்றும் தெரிவித்தார். மேலும், டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டிடங்கள் இல்லாததால் நெல்மணிகள் சேதமடைவதாகவும், நிரந்தர கட்டிடங்களை அமைத்து தர வலியுறுத்தி விரைவில் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.