நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், புதிய தொழிற் பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 28, 2026 நள்ளிரவு 11.59 மணி வரை. ஒரு தொழிற்பள்ளி ஒரு விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 5000 மற்றும் ஆய்வு கட்டணம் ரூ. 8000 செலுத்த வேண்டும். இந்த தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் தகவல்களுக்கு இணையதளத்தை அணுகலாம்.