நாகை மாவட்டம் திருக்குவளை அருகே வாழக்கரை பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜாராமன் (40) முகம் மற்றும் தலையில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவர் கடந்த 2024ல் லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்பட்டு, நேற்று வழக்கு விசாரணைக்கு சென்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என வெளிப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.