மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்

1பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 893 குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில், கீழ ஒதியத்தூர் மற்றும் ஓர்குடி பகுதிகளில் பிரதான நீருந்து குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணிகள் மற்றும் மின் மோட்டார்களை மாற்றும் பணிகள் நடைபெறுவதால், வரும் பிப்ரவரி 18, 2026 முதல் பிப்ரவரி 20, 2026 வரை மூன்று நாட்களுக்கு நாகப்பட்டினம் நகராட்சி, கீழ்வேளுர், வேளாங்கண்ணி பேரூராட்சிகள் மற்றும் சில ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி