நாகை மாவட்டத்தில் 893 குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில் சோதனை ஓட்டம் நடைபெறுவதால், நாளை (5ஆம் தேதி) முதல் 7ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கீழ்வேளூர், கீழையூர் மற்றும் தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.