நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகளையும் தாட்கோ சார்பில் தற்காலிக தூய்மை பணியாளர்களாக பணிபுரியும் 5 பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரூ. 20,000 திருமண உதவித்தொகையும், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.