நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 03 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளையும், 01 மாற்றுத்திறனாளிக்கு ஊன்றுகோலையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. வ. பவணந்தி, தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு. கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள்; பொதுமக்கள் கலந்து கொண்டனர்.