மாற்றுதிறனாளிகளுக்கு நல திட்ட உதவிகள்

0பார்த்தது
நாகப்பட்டினம் தளபதி அறிவாலயத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, நாகை நகர திமுக செயலாளர் மாரிமுத்து மற்றும் நாகை மாவட்ட திமுக செயலாளர் கெளதமன் தலைமையில் திமுகவினர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் அணி சார்பில் அம்பாள் குமார் ஏற்பாட்டில் 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி