நாகை, பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமாக இருந்த இரு பெண்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் 4 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அகிலா (39) மற்றும் பசும்பொன் (53) ஆகிய இரு பெண்களையும் கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.