கீழையூர் ஒன்றியத்தைச் சேர்ந்த திவ்யா (27) என்பவர், காடந்தேத்தி அய்யனார் கோயிலுக்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஈசனூர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நாகையிலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த கார் அவர் மீது மோதி தலையில் பலத்த காயமடைந்த திவ்யா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கீழையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.