
நாகைக்கு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு
நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் பாத்திமாபர்ஹானா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். மனு தாக்கல் செய்வதற்கு முன்பு வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலவர் கோயில், நாகூர் ஆண்டவர் தர்கா ஆகிய மும்மத தலங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். பின்னர் மேளதாளத்துடன் பேரணியாக நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகம் சென்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக உசைன்பீவி மனு தாக்கல் செய்தார்.
























