நாகப்பட்டினம் - Nagapattinam

நாகை: சகோதரி வீட்டிற்கு சென்றவருக்கு கத்திக்குத்து; மைத்துனர் கைது

நாகை: சகோதரி வீட்டிற்கு சென்றவருக்கு கத்திக்குத்து; மைத்துனர் கைது

அந்தனப்பேட்டையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரகாஷ் (28), சகோதரி வீட்டிற்குச் சென்றார். அங்கு குடும்பப் பிரச்சனை காரணமாக சகோதரிக்கும் அவரது கணவர் பழனிசாமிக்கும் (38) இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரகாஷ் சமாதானம் செய்ய முயன்றபோது, பழனிசாமிக்கும் பிரகாஷுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, இருவரும் தாக்கிக்கொண்டனர். ஆத்திரமடைந்த பழனிசாமி, கத்தியால் பிரகாஷைக் குத்தினார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரகாஷ் உயிரிழந்தார். வெளிப்பாளையம் போலீசார் பழனிசாமியை கைது செய்தனர்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்