
வாகன சோதனையில் 850 மது பாட்டில்கள் பறிமுதல்
சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. K. S. பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நான்கு சோதனை சாவடிகள் மற்றும் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளின் போது, காரில் கடத்திவரப்பட்ட 750 (180ml) மதுபாட்டில்கள் மற்றும் பைக்கில் கடத்திவரப்பட்ட 100 (180ml) மதுபாட்டில்கள் என மொத்தம் 850 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், இருசக்கர வாகனம் மற்றும் ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



























