மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 130 வீரர்கள், 33 வீராங்கனைகள் 'வந்தே மாதரம் சைக்கிளோ மாரத்தான்' மூலம் நாட்டின் கடலோர பாதுகாப்பை வலியுறுத்தியும், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர். கொல்கத்தாவில் ஜனவரி 28 அன்று தொடங்கிய இந்தப் பேரணி, ஒரிசா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களைக் கடந்து நாகை வந்துள்ளது. இன்று நாகை மாவட்டத்திற்கு வருகை தந்த வீரர்களை, நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் அஜிதா தலைமையில் மாணவ மாணவிகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். இந்தப் பேரணி பிப்ரவரி 28 அன்று கேரளாவில் நிறைவடைகிறது.