மாவட்டத்தில் சம்பா நெல் கொள்முதல் ஆட்சியர் விளக்கம்

175பார்த்தது
மாவட்டத்தில் சம்பா நெல் கொள்முதல் ஆட்சியர் விளக்கம்
நாகப்பட்டினம் மண்டலத்தில் காரீப் ஆண்டு சம்பா பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 195 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க ஆணையிடப்பட்டு, இதுவரை 123 நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 04.02.2026 வரை 4990 மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, ரூ. 8.64 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அருந்தவம்புலம் பகுதியில் திறந்தவெளி சேமிப்பு மையம் 05.02.2026 முதல் திறக்கப்பட்டு நெல் இறக்கும் பணி நடைபெற்று வருகிறது. வெளி மாவட்ட அல்லது வியாபாரி நெல் கொள்முதல் செய்யக்கூடாது, மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி