தண்ணீர் கேட்டு விவசாயிகள் சாலை மறியல்

0பார்த்தது
கடைமடை வரை தண்ணீர் வந்து சேராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், நாகை-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மேலப்பிடாக்கை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற இந்த போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் வெண்ணார் வடிநிலை கோட்ட உதவி செயற்பொறியாளர் வினோத் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி