ஆற்றில் கவிழ்ந்த கார் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

0பார்த்தது
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. கடல் சீற்றத்தால் மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. 28 மீனவ கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தரங்கம்பாடி அருகே சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.