கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு (VIDEO)

83பார்த்தது
கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே காவிரி மூலம் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

கொள்ளிடம் ஆற்றின் வழியே செல்லும் தண்ணீர் பழையாறு மீன்பிடி துறைமுகம் அருகே வங்க கடலில் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் கலக்க தொடங்கியது. கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து 1.50 லட்சம் கன அடி வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கொள்ளிடம் அருகே ஆற்றின் திட்டுப் பகுதியில் அமைந்துள்ள நாதல்படுகை, முதலைமேடு, வெள்ளமணல் ஆகிய கிராமங்களை தண்ணீர் சூழும் நிலை ஏற்படலாம். 

ஒருவேளை இந்த கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தால் மக்களை ஆற்றின் கரை பகுதியில் உள்ள பள்ளிகளில் முகாம் அமைத்து தங்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் காவல் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் திட்டுப் பகுதி கிராமங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி