1 கோடி ரூபாயில் தார் சாலை பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

1பார்த்தது
1 கோடி ரூபாயில் தார் சாலை பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சியில், 2025-2026 ஆம் நிதியாண்டிற்கான டூரிப், SFC நிதி திட்டத்தின் கீழ், ₹1 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் சக்தி விநாயகர் கோயில் தெரு, பம்பு செட் தெரு, கீழத்தெரு முதல் குறுக்கு தெரு, முஸ்ஸீம் தெரு ஆகிய பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்யப்பட்டு தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கீழையூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, பேரூர் செயலாளர் மரிய சார்லஸ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி