வேளாங்கண்ணியில் தனியார் தங்கும் விடுதியில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ்குமார் (40) மற்றும் அவரது மனைவி மீனா (38) ஆகியோர் கடந்த 3ம் தேதி அறை எடுத்து தங்கினர். நேற்று (6ம் தேதி) இரவு விடுதியை காலி செய்ய வேண்டிய நிலையில், அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது, இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டனர். வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.