வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் உண்ணாவிரதம்

0பார்த்தது
மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வேலு குபேந்திரன் வீட்டின் அருகே உள்ள நிலம் தொடர்பாக உரிமையியல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அவரது வீட்டை சிலர் தாக்கி வேலிக்கு தீ வைத்தனர். தாக்குதல் நடத்தியோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததோடு, வருவாய்த்துறையினர் அவர்களுக்கு துணை நிற்பதாகக் கூறி, வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து, அதிகாரிகளைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறையில் வழக்காடும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Job Suitcase

Jobs near you