நாகை: இடிந்து விழுந்த வீட்டுச்சுவர்.. சிறுவர்களுக்கு காயம்

2பார்த்தது
நாகை: இடிந்து விழுந்த வீட்டுச்சுவர்.. சிறுவர்களுக்கு காயம்
நாகை மாவட்டம், மாணலுாரைச் சேர்ந்த பூமிபாலனுக்கு, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், கான்கிரீட் வீடு ஒதுக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வீட்டில், நேற்று காலை பூமிபாலனின் 12 வயது மகன் மற்றும் 10 வயது மகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில், இருவரும் இடிபாடுகளில் சிக்கினர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து வலிவலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you