தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளுடன் அதிமுக நாகை மாவட்டக் கழக அலுவலகத்தில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாகை மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் MLA, கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.