புது குப்பம் பகுதியில் கடல் அரிப்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு

1பார்த்தது
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடற்கரையோரங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல மீன்வளத் துறையினர் தடை விதித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தின் 28 மீனவர் கிராமங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. கடல் அரிப்பால் ஃபைபர் படகுகளை நிறுத்த முடியாததால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. புது குப்பம் மீனவர்கள் கருங்கல் தடுப்புச் சுவர் கோரிக்கை விடுத்துள்ளனர். தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கும் கடல் அரிப்பால் பாதிப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி