மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதியாக அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று (செப்.29) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மாலை கடற்கரைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அவர்களின் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.