வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் பெய்த பலத்த மழையால், வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட கோகுலம் நகர், ராசி நகர், கைலாஷ் நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. சேந்தங்குடி வாய்க்கால் வழியே தண்ணீர் வடியாததாலும், அதில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்ததாலும், மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து துர்நாற்றம் வீசி, பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.