காவிரி டெல்டாவின் கடைமடை மாவட்டமான நாகப்பட்டினத்தில் குருவை அறுவடை முடிந்து, ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாகை, திருமருகல், கீழ்வேளூர், கீழையூர், தலைஞாயிறு போன்ற பகுதிகளில் நாற்று நடவு மற்றும் நேரடி விதைப்பு முறைகளில் சாகுபடி நடைபெறுகிறது. இதற்காக நாற்றங்கால் அமைத்து நாற்றுப் பறிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.