மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் உள்ள சைவ ஆதீன மடத்தின் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் மணிவிழா மாநாடு நேற்று துவங்கியது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக இன்று 150 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கும் விழா மற்றும் மணிவிழா சிறப்பு மலர் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று குத்துவிளக்கேற்றி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் பல்வேறு ஆதீனங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். ஆளுநர் சிறப்பு மலரையும் வெளியிட்டார்.