தருமபுர ஆதீனத்தில் வெளிநாட்டவர்கள் செய்த செயல்

0பார்த்தது
கஜகஸ்தான், ரஷ்யா, உக்ரைன் நாடுகளைச் சேர்ந்த 10 வெளிநாட்டுப் பயணிகள், ஆறு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருக்கடையூர் வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட ஆலயங்களில் தரிசனம் செய்து, நவகிரக ஆலயங்களில் உலக நன்மைக்காக அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். இன்று, மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் உள்ள சைவ ஆதீன மடத்திற்குச் சென்ற இவர்கள், ஆதீன மடாதிபதி ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். சுவாமிகள் அவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கி, வேத விற்பன்னர்கள் வியக்கும் வண்ணம் சமஸ்கிருதத்தில் மிருத்திஞ்சய மந்திரம், காயத்ரி மந்திரங்களை ஓதி வழிபாடு செய்தனர். பின்னர், ஆதீன மடத்தில் உள்ள பழமையான வாத்திய இசைக் கருவிகள் மற்றும் கலைப் பொருட்களைப் பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி