பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்து வந்த விஐபி

1பார்த்தது
பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டரில் பறந்து வந்த விஐபி
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தின் 27வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் 60வது மணிவிழாவை முன்னிட்டு நடைபெறும் பத்து நாள் ஆன்மீக மாநாட்டில், பெங்களூரு மதுசூதனன் சாய் குளோபல் மனிதநேய இயக்கத்தின் நிறுவனர் ஸ்ரீ மதுசூதனன் சாய் பங்கேற்றார். அவர் ஹெலிகாப்டர் மூலம் மன்னம்பந்தல் வந்திறங்கியதும், ஆதீன சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ஆதீன மடாதிபதியை நேரில் சந்தித்து பேசிய அவர், நினைவுப் பரிசும் பொன்னாடையும் பெற்றார். தொடர்ந்து, திருநங்கைகள் மற்றும் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை இருவரும் இணைந்து வழங்கினர்.

தொடர்புடைய செய்தி