மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பாரதி நகரில் உள்ள குடியிருப்பில் விபச்சார தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் செயல்பட்டு வந்த இடத்தில் சோதனை நடத்திய போலீசார், இரண்டு பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.