மயிலாடுதுறை அடுத்த தாளஞ்சேரி ஊராட்சி வடகரை கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த அன்னபூரணி அம்பாள் சமேத வைத்தியநாதசுவாமி என்கிற வருந்தீஸ்வரர் கோயிலில் நேற்று (மே 14) கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. யாகசாலை பூஜைகள், பூர்ணா ஹூதி, மகாதீபாரதனை ஆகியவை நடைபெற்றன. வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்கள் கோபுர கலசத்தை அடைந்து, சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர்.