நாகை: விசிக-வினர் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

183பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தொகுதி தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அவரிக்காடு அம்பேத்கர் நகரில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு மயானத்திற்கு செல்லும் பாதை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தராத திமுக அரசை கண்டித்து, அக்கட்சியின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தையினர் இன்று கருப்பு கொடி ஏந்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிராமம் முழுவதும் தேர்தல் புறக்கணிப்பு குறித்த பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி