
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தைப் பின்பற்றி அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கு நாராயணசாமி நாயுடு விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த விருதில் ரூபாய் 5 லட்சம் ரொக்கப் பரிசும் தங்கப் பதக்கமும் அடங்கும். விருது பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் சாகுபடி விவரங்களுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
























