வேதாரண்யம் உட்கோட்டம் துணை காவல்கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் வேதாரணியம் காவல் ஆய்வாளர் தலைமையில், 13.02.2026 அன்று வேதாரண்யம் ஸ்வஸ்திக் தியேட்டர் அருகே வாகன சோதனையின் போது, சட்டவிரோதமாக இணையவழி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட செல்வம், வீரகுமார், பாபு, தமிழரசன் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுமார் 3,06,200 ரொக்கப் பணம், 5 கைப்பேசிகள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.