கீழ்வேளூர் போலீஸ் சரகம் இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் ஸ்ரீதரன், அணக்குடி பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து பஞ்சரானதை ஓட்டுனருடன் சேர்ந்து சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அணக்குடி பகுதியைச் சேர்ந்த கதிர்நாத் என்பவர், போக்குவரத்து நெரிசல் இருப்பதாகக் கூறி ஸ்ரீதரனைத் தாக்கி, பேருந்தின் கண்ணாடியை உடைத்து, ஜாக்கியை எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.