தருமபுர ஆதீனம் மடத்தில் குழந்தைகள் தின விழா

2பார்த்தது
இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஸ்ரீ குரு ஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேருவைப் போல் வேடமணிந்த மாணவர், மடாதிபதிக்கு பூங்கொத்து அளித்தார். தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், பள்ளியில் பயிலும் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பழங்களை வழங்கி ஆசிர்வதித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி