மயிலாடுதுறை: மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு

84பார்த்தது
வைத்தீஸ்வரன் கோயிலில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க சீர்காழி ஒன்றிய 5-ஆவது மாநாடு நடைபெற்றது. சங்கத்தின் ஒன்றிய தலைவர் உத்திராபதி தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், முருகன் வரவேற்றார். மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு சந்திரகலா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட தலைவர் கணேசன் தொடக்கிவைத்தார். 3 ஆண்டுகள் நடைபெற்ற பணிகளை எழுத்துப்பூர்வமான வேலை அறிக்கையை ஒன்றிய செயலாளர் த. நாகராஜன் வாசித்தார். வரவு செலவு அறிக்கையை ஒன்றிய பொருளாளர் சுமதி முன்வைத்தார். 

மாவட்ட பொருளாளர் லட்சுமி, மாவட்ட துணை தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் பேசினர். 17 பேர் கொண்ட புதிய ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. ஒன்றிய தலைவராக தமிழ்மாறன், செயலாளராக நாகராஜன், பொருளாளராக சுமதி, துணைத் தலைவராக உத்திராபதி, துணை செயலாளராக முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி