நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் பேராசிரியர் எம்எச் ஜவாஹிருல்லா அறிமுக கூட்டம் திருமருகல் தெற்கு ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர் திரு ஆர் டி எஸ் சரவணன் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த அறிமுக கூட்டம் வேட்பாளரை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடைபெற்றது.