காரைக்கால் DMI மெட்ரிகுலேஷன் பள்ளியின் பேருந்து அரசாலங்குடி அருகே வரும்போது, மதுபோதையில் இருந்த 3 இளைஞர்கள் வழிமறித்து கல்வீசி கண்ணாடிகளை உடைக்க முயன்றனர். இதனால் மாணவர்கள் அச்சமடைந்தனர். மயிலாடுதுறை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். தாமரைச்செல்வன் (23) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த ஆகாஷ் காவல்துறையினரிடம் பிடிபட முயன்று கீழே விழுந்து காயம் அடைந்தார். மற்றொரு குற்றவாளி கபிலனும் கைது செய்யப்பட்டார். மூவர் மீதும் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். கை முறிந்த ஆகாஷ் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.