மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2-ந்தேதி காலை 10.20 முதல் 10.30 மணி வரை அதிக சத்தம் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இது சமூக வலைத்தளங்களில் பீதியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர், இந்த சத்தம் 'ஜெட்' பயிற்சி விமானத்தின் சத்தம் என்றும், நில அதிர்வு அல்லது நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.