மயிலாடுதுறை அடுத்த தருமபுரம் ஆதீன மடத்தின் 27வது குரு ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் அறுபதாம் ஆண்டு மணிவிழாவை முன்னிட்டு 10 நாட்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாளான நேற்று, பிரபல திரைப்பட பாடகர் கோல்டன் தேவராஜ் தனது இன்னிசை கச்சேரியை நடத்தினார். அவர் சிவவாக்கியரின் புகழ்பெற்ற 'ஓடி ஓடி உலகளந்த ஜோதியே' போன்ற பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். பொதுமக்கள் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர்.